Saturday, January 2, 2010

வெட்டி வேலை

பெருங்கடல் நீரில் ஒரு துளி என் துளி. வெட்டி வேலை ன்னு தெரிஞ்சும் நானே என் தலையில மண் அள்ளி போட்டுக்குற முயற்சி. இதையெல்லாம் படிக்கணும் ன்னு எவன் எவன் தலைவிதியோ எல்லோருக்கும் என் அனுதாபங்கள்.

********************

31 டிசம்பர் - வியாழக்கிழமை . 01 ஜனவரி - வெள்ளிக்கிழமை . வேற ஒரு கருமாந்திரமும் எனக்கு தெரியல. sms அனுப்புறதுக்கும், கழிச்சு போட்ட டிவி ப்ரோக்ராம் பார்க்கிறதுக்கும், அன்னிக்கி ஒரு நாளாவது கோயிலுக்கு போறதுக்கும், காதலி கூட சுத்துறதுக்கும், குடிக்கிறதுக்கும், ஆடுறதுக்கும் பயன்படுத்திகிட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

*******************

வருஷம் ஆரம்பத்திலே ஒரு நல்ல செய்தி.. எங்கள் நண்பன் (தம்பி) lawrance @ சிவம் , குரு என்ற காரெக்டரில் நடித்த திரைப்படம் - புகைப்படம் ரிலீஸ் ஆயிருக்கு. கேபிள் அண்ணாச்சி பாராட்டினது வரைக்கும் சந்தோசம். சிதறி கிடக்கிற மற்ற நண்பர்களுக்கும் 2010 கொஞ்சமாவது சந்தோசத்தை தர தாமஸ் ஆல்வா எடிசனை வேண்டிக்கிறேன்.

******************

அது என்ன மந்திரம் ..? எனக்கு தெரியலப்பா... வழக்கமா கவிதை எழுதுறவன் தான் மாத்தி மாத்தி எழுதிகிட்டு இருக்கான் இந்த ஆனந்த விகடன் பத்திரிக்கையில.... நானும் என் நண்பனும் விகடன் தரத்திற்கு இல்லேன்னாலும் விகடன் தரத்திற்கு ஏதாவது கிறுக்கி அனுப்பின பேப்பர் எல்லாம் சாயங்காலம் அவங்க சாப்பிடுற பஜ்ஜி ல இருக்கிற எண்ணையை எடுக்கத்தான் யூஸ் பண்றாங்க போலிருக்கு. அட வெறுப்பு என்னன்னா நாம அனுப்புறது நல்லா இருக்காதுதான் அதை நல்லா இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்ப சொன்ன reply லெட்டர் கூடவா கை துடைக்க போயிருக்கும்..?
விகடன் மேலிருந்த அடிக்சன் போயி வருஷம் ஆச்சு. கவிதைகள் பக்கம் புரட்டும் போது முதல்ல கவிதைய எழுதினவன் பேர முதல்ல பார்க்கிறது பழகிப்போச்சு நம்ம பதிவர் சங்கத்தில உள்ள ஆட்கள் பேர் வர்றதே தனி சந்தோசம்.

*****************

ஏம்ப்பா.... சங்கத்து மக்களே..... எத்தனை பேரு இதை படிப்பீங்கன்னு எனக்கு தெரியல.. ஆனா முதல் பதிவிலேயே ஒட்டு மொத்த பதிவர் சங்கத்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்க பீச் ல கூட்டம் போடுங்க, மொத்தமா வீட்ல படம் பாருங்க இல்ல, மொட்டை மாடில இலக்கியம் பேசுங்க, ஏன் சினிமா படம் கூட எடுங்க.... ஆனா நமக்கு தெரிஞ்சு . . . (?)

சோத்துக்குகூட வழியில்லாமல் கண்கள் நிறைய கனவுகளோட கோடம்பாக்கத்தில வானம் பார்த்துட்டு அலையிற உதவி இயக்குனர்கள் நூத்துகணக்குல இருக்காங்க. கனவா காங்கிறதுக்கு கூட உடம்பில தெம்பு எல்லாம பசியில கிடக்கான் அவன். என்னை பொறுத்த வரைக்கும் இந்த உலகத்தில அதிகமான சமூக பொறுப்பும், அக்கறையும் அவன்கிட்ட தான் இருக்கும். இருக்கணும். அவனால மட்டும் தான் , அவன் நினைச்சா மட்டும் தான் நினைச்சதை அடித்தட்டு மக்கள் வரைக்கும் கொண்டு போக முடியும். ஏசி ரூம் ல உட்கார்ந்துகிட்டோ, பெட்ல படுத்துகிட்டோ, நாலஞ்சு புக்ஸ் படிச்சிட்டு , லேப்டாப் ஐ நோண்டிகிட்டு இருக்கிறவனால ஒரு மயிரையும் மாத்த முடியாது.

வா . சின்னதா ஒரு கூட்டம் போடு. பத்தே பத்து பேரு சேருவோம். மாசம் ஒரு குறும்படம் எடுப்போம். அப்புறமா இதபோயி நாலு பேரு கிட்ட காமி. போடா. போயி இன்னும் நல்லா சான்ஸ் தேடு . நல்லா படமா கொடுன்னு அனுப்புவோம். சின்னதா அவனுக்கு ஒரு விசிட்டிங் கார்டு போட்டு கொடுப்போம். அவ்ளோதான்யா.. கொஞ்ச நாள்ல
நிறைய பசங்க, சுப்பிரமணியபுரம் மாதிரி ஊருகள்ள பல குழுக்களா கபடி ஆடிட்டு இருப்பாங்க. பெரிய தலைங்க எல்லாம் கூடி பேசுங்க. பேசுவோம். எவன் தலை எழுத்தாவது மாறணும்ன்னு விதி இருந்தா நடக்கும்.

*******************



*******************


எனக்கான கோப்பை
நிரம்பியேயிருக்கிறது .

கோப்பைக்கு வெளியேயும்
உள்ளேயும் நீயேயிருக்கிறாய்
மெதுவாக அருந்த
துவங்கினேன் உன்னை
வெதுவெதுப்பாய் நீ
என்னுள் கரைய ,
கோப்பை நிரம்பிக்கொண்டேயிருக்கிறது - நீயும் தான் .
எப்பொழுது முடியுமென்று
யாருக்கும் தெரியாது .

எனக்கான கோப்பை
நிரம்பியேயிருக்கிறது .


*********************

3 comments:

  1. //ஏம்ப்பா.... சங்கத்து மக்களே..... எத்தனை பேரு இதை படிப்பீங்கன்னு எனக்கு தெரியல..//

    உள்ளேன் ஐயா

    ReplyDelete
  2. //அவன் நினைச்சா மட்டும் தான் நினைச்சதை அடித்தட்டு மக்கள் வரைக்கும் கொண்டு போக முடியும். ஏசி ரூம் ல உட்கார்ந்துகிட்டோ, பெட்ல படுத்துகிட்டோ, நாலஞ்சு புக்ஸ் படிச்சிட்டு , லேப்டாப் ஐ நோண்டிகிட்டு இருக்கிறவனால ஒரு மயிரையும் மாத்த முடியாது.//

    ஏன் இந்தக் கொலைவெறி !

    ReplyDelete
  3. கோவி.. முத ஆளா வந்து அட்டனன்ஸ்
    போட்டதுக்கு ரொம்ப நன்றி. அப்புறம் நிஜமாவே கொலைவெறி தாங்க. வேட்டைக்காரன் படம் பார்த்த எபெக்ட். என் மேல தப்பு இல்ல. இதவிட அதிகமான வெறியெல்லாம் வரும் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணி கருத்து சொல்லுங்க. மறுபடியும் நன்றி.

    ReplyDelete